செய்திகள்
மோடி

மே 18, 20-ந்தேதிகளில் 100 மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

Published On 2021-05-13 13:21 GMT   |   Update On 2021-05-13 13:21 GMT
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், பிரதமர் மோடி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணமே உள்ளது. சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தல் காரணமாக கிராமங்களிலும் கொரோனா அரக்கன் வேகமாக பரவி வருகிறான். இதனால் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசும், மாநில அரசுகளும் கவனம் செலுத்து வரும் நிலையில், கட்டுக்குள் வரவில்லை.

ஏற்கனவே பிரதமர் மோடி பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த நிலையில் வருகிற 18 மற்றும் 20-ந்தேதிகளில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 100 மாவட்டங்களின் ஆட்சியர்களிடம் ஆலோசனை நடத்துகிறார். அப்போது கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் எடுத்துவரும் நடவடிக்கைகளை கேட்டறிகிறார்.
Tags:    

Similar News