செய்திகள்
வைரல் புகைப்படம்

கங்கை நதியில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படங்கள்

Published On 2021-05-13 05:18 GMT   |   Update On 2021-05-13 05:18 GMT
பீகார் மாநிலத்தின் புக்சர் மாவடத்தில் ஓடும் கங்கை நதியில் சடலங்கள் வீசப்பட்டதாக கூறி வைரலாகும் புகைப்படங்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


கங்கை நதியில் 71 சடலங்கள் தூக்கி வீசப்பட்டதாக கூறி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. வைரல் புகைப்படங்கள் பீகார் மாநிலத்தின் புக்சர் மாவட்டத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சடலங்களை தெரு நாய்கள் மற்றும் மாடுகள் சுற்றி நிற்கும் காட்சி படமாக்கப்பட்டு இருக்கிறது.

சமீபத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் கங்கை நதியில் வீசப்படுவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 



வைரல் புகைப்படங்களை ஆய்வு செய்ததில், அது 2015 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. 2015 ஜனவரியில் நூற்றுக்கும் அதிகமான சடலங்கள் கங்கை நதியில் வீசப்பட்டன. இவை கான்பூர் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களுக்கு இடையிலான பகுதிகளில் காணப்பட்டன.
 
அந்த வகையில், வைரல் புகைப்படங்கள் சமீபத்தில் எடுக்கப்படவில்லை என உறுதியாகிவிட்டது. உண்மையில் இந்த புகைப்படங்கள் ஜனவரி 13, 2015 அன்று எடுக்கப்பட்டு தனியார் புகைப்பட வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News