செய்திகள்
கோப்புப்படம்

மராட்டியத்தில் கொரோனா பாதித்த 2 ஆயிரம் பேருக்கு பூஞ்சை தொற்று - 2 பேர் உயிரிழப்பு

Published On 2021-05-12 18:57 GMT   |   Update On 2021-05-12 18:57 GMT
கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் சிலர் “மியூக்கோர்மைகோசிஸ்” என்ற கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்புக்கு ஆளாவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மும்பை:

நாடு முழுவதும் பரவிவரும் கொடிய கொரோனா கொத்து கொத்தாக உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் புதிய அதிர்ச்சியாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் சிலர் “மியூக்கோர்மைகோசிஸ்” என்ற கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்புக்கு ஆளாவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அதிகப்படியான ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுவதாகவும், இந்த பாதிப்பு அமைதியாக உயிரை பறிக்க கூடியது என்ற அதிர்ச்சி தகவலை டாக்டர்கள் வெளியிட்டுள்ளனர்.

தற்போது மராட்டியத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை தொற்று பாதித்து இருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார். இதற்கிடையே நேற்று அங்கு 2 பேர் இந்த பூஞ்சை தொற்று காரணமாக இறந்துள்ளனர்.
Tags:    

Similar News