செய்திகள்
மம்தா பானர்ஜி

வன்முறைக்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை என கூறி வைரலாகும் தகவல்

Published On 2021-05-12 05:00 GMT   |   Update On 2021-05-12 05:00 GMT
மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் முடிவுகளுக்கு பின் அரங்கேறிய வன்முறை தொடர்பாக வைரலாகும் தகவல் குறித்து தொடர்ந்து பார்ப்போம்.

மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின் அரங்கேறிய வன்முறை காரணமாக மத்திய அரசு அம்மாநிலத்தில் சட்டப்பிரிவு 256 மற்றும் 257 அமலாக்கி இருப்பதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து வைரலாகும் பதிவுகளில் மத்திய அரசு மம்தா பானர்ஜியின் இறக்கைகளை இந்த சட்டப்பிரிவுகள் மூலம் துண்டித்துள்ளது. இதன் காரணமாக மேற்கு வங்க மாநில அரசாங்கத்தின் மூத்த உயர் அதிகாரிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுவர் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.



வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், சட்டப்பிரிவு 256 மற்றும் 257 அம்மாநிலத்தில் அமலாக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. சமீபத்தில் மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் தேர்தல் முடிவுகளுக்கு பின் அரங்கேறிய வன்முறையை கட்டுப்படுத்த தவறியதற்கு அம்மாநில தலைமை செயலாளர் மற்றும் காவல் துறை தலைமை இயக்குநருக்கு சம்மன் அனுப்பினார்.

அந்த வகையில், மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பிரிவு 256 மற்றும் 257 பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக கூறும் தகவல்களில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News