செய்திகள்
கோப்புப்படம்

கொரோனா 2-வது அலையில் இளம்வயதினர் அதிக அளவில் பாதிப்பு

Published On 2021-05-12 00:36 GMT   |   Update On 2021-05-12 00:36 GMT
கொரோனா 2-வது அலையில் இளம் வயதினர் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது
புதுடெல்லி:

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) தலைமை இயக்குனர் டாக்டர் பல்ராம் பார்கவா நேற்று அளித்த பேட்டியில், கொரோனா முதல், 2-வது அலை தாக்கம் தொடர்பான தகவல்களை ஒப்பிட்டு பார்த்தபோது, பாதிப்பில் வயது வித்தியாசம் அதிகம் தெரியவில்லை. பொதுவாக 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகம் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது.

அதேநேரம், தற்போது இளம்வயதினர் சற்று அதிகமாக பாதிக்கப்படுவது போலத் தோன்றுகிறது. அவர்கள் வெளியே செல்வதும், கொரோனாவின் புதிய உருமாறிய வகைகளும்தான் அதற்கு காரணம் என்று அவர் கூறினார்.
Tags:    

Similar News