செய்திகள்
கோப்புப் படம்

குஜராத்தில் ஒரு வார கால இரவு ஊரடங்கு நீட்டிப்பு

Published On 2021-05-11 17:47 GMT   |   Update On 2021-05-11 17:47 GMT
மத்திய அரசிடம் இருந்து கொரோனா தடுப்பூசி டோஸ்களை அதிக அளவில் பெற்ற மாநிலங்களின் வரிசையில் 3-வது இடத்தில் குஜராத் உள்ளது.
அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 6 லட்சத்து 93 ஆயிரத்திற்கு கூடுதலாக பதிவாகி உள்ளது.  இதுவரை 5 லட்சத்து 48 ஆயிரம் பேர் குணமடைந்து உள்ளனர். உயிரிழப்பு 8,511 ஆக உள்ளது.

மத்திய அரசு இலவச அடிப்படையிலான கொரோனா தடுப்பூசிகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கி வருகிறது. இதில் குஜராத் ஒரு கோடியே 48 லட்சத்து 70 ஆயிரத்து 490 டோஸ்களைப் பெற்றுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்புகளைக் குறைக்க தடுப்பூசிகள் பயன்படுத்திய போதிலும் தொற்று எண்ணிக்கை குறையாத சூழலில், குஜராத்தில் 36 நகரங்களில் ஒருவார காலத்திற்கு இரவு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.  இந்த உத்தரவானது வரும் 18-ம் தேதி வரை அமலில் இருக்கும்.

அரசின் இந்த புதிய உத்தரவின்படி, இன்றிரவு 8 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையில் சூரத், வதோதரா, ராஜ்கோட் மற்றும் அகமதாபாத் உள்ளிட்ட 36 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு அமலில் இருக்கும்.
Tags:    

Similar News