செய்திகள்
கோப்புப்படம்

குஜராத்தில் கொரோனாவை விரட்ட மாட்டு சாணம் குளியல்: மருத்துவர்கள் எச்சரிக்கை

Published On 2021-05-11 14:39 GMT   |   Update On 2021-05-11 14:39 GMT
மாட்டு சாணத்தில் குளித்தால் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என சிலர் நம்புகின்ற நேரத்தில், அது ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பரவல் மோசமடைந்துள்ள நிலையில், வட இந்தியாவின் கிராமப் புறங்களிலும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் இரண்டு கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மனித உயிரிழப்பு மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியிலான பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது கொரோனா.

இந்நிலையில் குஜராத்தில் மாட்டு சாணத்தில் குளித்தால் நோய் எதிர்ப்பு அதிகரிக்கும் என்ற செய்தி பரவி வருகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பலரும் மாட்டுச் சாணம் குளியல் எடுத்து வருகின்றனர். மாட்டுச்சாணத்தை உடலில் பூசிக்கொண்டு, யோகா செய்தபின் மாட்டுப்பால் மற்றும் மோர் ஆகியவற்றால் உடலை சுத்தம் செய்கின்றனர்.



மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் இணை மேலாளராக இருக்கும் நபர் ஒருவர், ‘‘நாங்கள், டாக்டர்கள் கூட இங்கே சிகிச்சைக்கு வந்திருப்பதை பார்க்கிறோம். அவர்கள் தாராளமான வெளியில் சென்று இது ஆபத்தானது இல்ல எனக் கூறலாம்’’ என்றார்.

ஆனால் இதுபோன்று மாட்டுச் சாணத்தால் குளிப்பதால் கொரோனாவை விரட்டலாம் என்பது போன்ற எந்த அறிவியல் பூர்வமான நிரூபிக்கப்படவில்லை என்கிறார்கள் மருத்துவர்கள். இதனால் வேறுவிதமான தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
Tags:    

Similar News