செய்திகள்
மோடி, ராகுல் காந்தி

ஆற்றில் உடல்கள் மிதக்கின்றன... நீங்கள் சென்ட்ரல் விஸ்தாவை மட்டும் பார்க்கிறீர்கள்- மோடி மீது ராகுல் காந்தி தாக்கு

Published On 2021-05-11 11:02 GMT   |   Update On 2021-05-11 11:02 GMT
கங்கை ஆற்றில் நேற்று பிணங்கள் மிதந்து வந்த நிலையில், பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இந்தியா கொரோனா தொற்றால் கடும் சிக்கலை சந்தித்து வருகிறது. கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த அளவிற்கு மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பிவிட்டன.

இந்த கொரோனா தொற்றுக்கிடையே மத்திய அரசு சென்ட்ரல் விஸ்தா கட்டுமானத்திற்கான அனைத்து அனுமதிகளையும் வழங்கி, வேலையை முடிப்பதற்கான காலக்கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

நேற்று பீகாரில் கங்கை ஆற்றில் ஏராளமான பிணங்கள் மிதந்து வந்தன. இது இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கரை ஒதுங்கிய பிணங்களால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.



இந்த நிலையில் பிரதமர் மோடியை ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ராகுல் காந்தி டுவிட்டர் பக்கத்தில் ‘‘ஆற்றில் உடல்கள் மதிக்கின்றன. மருத்துவமனையில் கிலோ மீட்டர் கணக்கில் வரிசையில் நிற்கின்றனர். உயிர் பாதுகாப்பு பறிக்கப்பட்டுள்ளது. நீங்கள் சென்ட்ரல் விஸ்தாவை மட்டும் பார்க்கிறீர்கள். அந்த கண்ணாடியை கழற்றிவிட்டு மற்றவற்றையும் பாருங்கள்’’ எனப் பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News