செய்திகள்
கொரோனா தடுப்பூசி

தடுப்பூசி பற்றி மக்களிடம் புதுவித பயம்: மந்திரி வெளியிட்ட திடுக் தகவல்

Published On 2021-05-11 02:18 GMT   |   Update On 2021-05-11 02:50 GMT
கொரோனாவை துரத்த தடுப்பூசியை அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனாலும் தடுப்பூசி பற்றி ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு விதமான அச்சம் நிலவி வரத்தான் செய்கிறது.
நாசிக் :

நாசிக் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா நோய் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 9-ந் தேதி நிலவரப்படி நாசிக் நகரில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்து 56 ஆயிரத்து 84 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இறப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்து 865 ஆக அதிகரித்தது.

கொரோனாவை துரத்த தடுப்பூசியை அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வருகிறது. தடுப்பூசியால் பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்றும், முறையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு உயிருக்கு உத்ரவாதம் என்றும் அரசு கூறி வருகிறது. ஆனாலும் தடுப்பூசி பற்றி ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு விதமான அச்சம் நிலவி வரத்தான் செய்கிறது.

இது குறித்து மந்திரி சகன் புஜ்பால் நிருபர்களிடம் கூறுகையில், "நாசிக் மாவட்டத்தில் சில பகுதிகளில் உள்ள பழங்குடியின மக்கள் தடுப்பூசியால் ஆண்மை குறைவு ஏற்படுவதாக பயந்து அதை எடுத்துக்கொள்ள அச்சப்படுகின்றனர். இதேநேரத்தில் கிராமப்புறங்களில் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே அச்சத்தை புறந்தள்ளி அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும்" என்றார்.
Tags:    

Similar News