செய்திகள்
பிரியங்கா காந்தி

சென்டிரல் விஸ்டா திட்டத்துக்கான மொத்த செலவு ரூ.20 ஆயிரம் கோடி - பிரியங்கா காந்தி எதிர்ப்பு

Published On 2021-05-10 17:58 GMT   |   Update On 2021-05-10 17:58 GMT
டெல்லியில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவில் சென்டிரல் விஸ்டா திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் பாராளுமன்ற புதிய கட்டிடம், துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு புதிய இல்லங்கள் ஆகியவை சென்டிரல் விஸ்டா திட்டத்தில் அடங்கும். இந்தத் திட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:

சென்டிரல் விஸ்டா மற்றும் பிரதமரின் வீட்டுக்கான மொத்த செலவு ரூ.20 ஆயிரம் கோடி. இது, 62 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி வாங்குவதற்கான செலவு ஆகும். 22 கோடி ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள் வாங்குவதற்கு சமம். 10 லிட்டர் ஆக்சிஜன் கொண்ட 3 கோடி சிலிண்டர்களை வாங்கலாம். மொத்தம் 12 ஆயிரம் படுக்கைகள் கொண்ட 13 எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகளுக்கு சமம். அப்படி இருக்க ஏன் சென்டிரல் விஸ்டா திட்டத்துக்கு செலவிட வேண்டும்? என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News