செய்திகள்
அரவிந்த் கெஜ்ரிவால்

3-ம் அலைக்குத் தயாராக இருக்க வேண்டும் - அரவிந்த் கெஜ்ரிவால்

Published On 2021-05-10 17:20 GMT   |   Update On 2021-05-10 17:20 GMT
கூடுதல் தடுப்பூசிகளைத் தரக் கோரி மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளதாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

டெல்லியில் ஜிடிபி மருத்துவமனை அருகே உள்ள கொரோனா சேவை மையத்தில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சுகாதாரத் துறை மந்திரி சத்யேந்தர் ஜெயின் ஆய்வு மேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து,  முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

3, 4 நாட்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தடுப்பூசியை விநியோகிக்கக் கோரி நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டுள்ளோம். ஆனால், மத்திய அரசே தடுப்பூசியை வழங்குகிறது என நினைக்கிறோம். ஒரு மாதத்தில் கிடைக்கப்பெறவுள்ள தடுப்பூசிகள் குறித்து மத்திய அரசிடமிருந்து எங்களுக்குக் கடிதம் கிடைத்துள்ளது. கூடுதல் தடுப்பூசிகளைத் தரக் கோரி மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்.

ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளை அதிகரிக்கிறோம். 3-ம் அலைக்குத் தயாராக இருக்க வேண்டும். இந்த அலையில் தினசரி பாதிப்பு அதிகபட்சமாக 28 ஆயிரத்தைத் தொட்டது. 

இந்த அளவின் அடிப்படையில் உள்கட்டமைப்பை உருவாக்கி வருகிறோம். அடுத்த அலையில் தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தைத் தொட்டால்கூட எங்களால் எதிர்கொள்ள முடியும் என்றார்.
Tags:    

Similar News