செய்திகள்
கோப்புப்படம்

மேற்கு வங்காளத்தில் 61 பா.ஜனதா எம்எல்ஏ-க்களுக்கு 'X' பிரிவு பாதுகாப்பு

Published On 2021-05-10 16:47 GMT   |   Update On 2021-05-10 16:47 GMT
மேற்கு வங்காளத்தில் தேர்தலுக்குப்பின் வன்முறை வெடித்த காரணத்தால், 61 பா.ஜனதா எம்எல்ஏ-க்களுக்கு 'X' பிரிவு பாதுகாப்பு வசழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் 200 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. பா.ஜனதா 77 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

தேர்தல் முடிந்த பின்னர் மிகப்பெரிய அளவில் வன்முறை வெடித்தது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் துவம்சம் செய்யப்பட்டன.

இதனால் பா.ஜனதா எம்எல்ஏ-க்கள் அச்சுறுத்தல் இருப்பதாக அச்சம் தெரிவித்திருந்தனர். மேலும், வன்முறை குறித்து மத்திய பாதுகாப்பு அமைப்புகள் அறிக்கை தாக்கல் செய்திருந்தன. அதனடிப்படையில் 61 பா.ஜனதா எம்எல்ஏ-க்களுக்கு 'X' பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

ஏற்கனவே சுவேந்து அதிகாரிக்கு 'Z' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது, மேலும் சிலருக்கு 'Y' பிரிவு பாதுகாப்பு  வழங்கப்பட்டுள்ளது.

'X'  பிரிவு பாதுகாப்பில் மூன்று அல்லது ஐந்து ஆயுதம் ஏந்தி பாதுகாப்பு வீரர்கள் 24 மணி நேரம் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியை மேற்கொள்வார்கள்.
Tags:    

Similar News