செய்திகள்
சோனியா காந்தி

கொரோனா தடுப்பு பணி... மோடி அரசு மீது சோனியா கடும் தாக்கு

Published On 2021-05-10 06:57 GMT   |   Update On 2021-05-10 06:57 GMT
மோடி அரசு தொற்றுநோயை சரியாக கையாளாமல் புறக்கணித்ததற்கு நாடு ஒரு பயங்கரமான விலையை கொடுப்பதாக சோனியா காந்தி கூறி உள்ளார்.
புதுடெல்லி:

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பேசியதாவது:-

மோடி அரசு தனது பொறுப்பை கைவிட்டு, தடுப்பூசி போடுவதை மாநிலங்களிடம் விட்டுள்ளது. அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடுவது, மத்திய அரசுக்கு பொருளாதார ரிதியாக மிகவும் நடுநிலையாக இருந்திருக்கும். 

கடந்த 4 வாரங்களில், கொரோனா தொற்று நிலைமை பெரிய பேரழிவாக மாறியுள்ளது. ஆட்சி நிர்வாகத்தின் தோல்விகள் வெளிப்படையாக தெரிகிறது. விஞ்ஞான ஆலோசனைகள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டுள்ளன. மோடி அரசு தொற்றுநோயை சரியாக கையாளாமல் புறக்கணித்ததற்கு நாடு ஒரு பயங்கரமான விலையை கொடுக்கிறது. 

சர்வதேச சமூகம் நமக்கு விரைந்து உதவியது. நமக்கு உதவிய அனைத்து நாடுகளுக்கும் அமைப்புகளுக்கும் காங்கிரஸ் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஆளுங்கட்சியின் ஆணவம், திறமையின்மை ஆகியவற்றால் தான் நமக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News