செய்திகள்
கோப்புபடம்

வெளிநாடுகளில் இருந்து இதுவரை 3 லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகள், 6,608 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வருகை

Published On 2021-05-09 09:00 GMT   |   Update On 2021-05-09 09:00 GMT
இந்தியாவுக்கு பல்வேறு நாடுகளும், சர்வதேச அமைப்புகளும் கடந்த ஏப்ரல் 27-ந்தேதி முதல் மருந்து, மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ உதவிகளை அளித்து வருகின்றன.

புதுடெல்லி:

வெளிநாடுகளில் இருந்து இந்தியா, இதுவரை 3 லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகள், 6,608 ஆக்சி ஜன் செறிவூட்டிகள், 3 ஆயிரத்துக்கும் அதிகமான ஆக்சிஜன் சிலிண்டர்களை பெற்று மாநிலங்களுக்கு விநியோகித்து இருப்பது தெரியவந்துள்ளது.

கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவில் திரவ மருத்துவ ஆக்சிஜனுக்கும், கொரோனா தடுப்பூசிகள் உள்ளிட்ட மருந்துகளுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகள் இந்தியாவுக்கு ஏராளமான உதவிகளை அளித்து வருகின்றன.

இந்த உதவிகள் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவுக்கு பல்வேறு நாடுகளும், சர்வதேச அமைப்புகளும் கடந்த ஏப்ரல் 27-ந்தேதி முதல் மருந்து, மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ உதவிகளை அளித்து வருகின்றன.

அமெரிக்க-இந்திய ராஜாங்க கூட்டுறவு அமைப்பு (யு.எஸ்.ஐ.எஸ்.பி. எப்), சுவிட்சர்லாந்து, போலந்து, நெதர்லாந்து, இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இருந்து கடந்த 7-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மட்டும் 2,060 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 30,000 ரெம்டெ சிவிர் மருந்துகள், 467 வெண்டி லேட்டர்கள், 3 ஆக்சிஜன் உற்பத்தி உபகரணங்கள் ஆகியவை வந்துள்ளன.

ஒட்டு மொத்தமாக கடந்த ஏப்ரல் 27-ந்தேதி முதல் மே 7-ந்தேதி வரை வெளிநாடுகளில் இருந்து 6,608 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 3,856 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 14 ஆக்சிஜன் உற்பத்தி உபகரணங்கள், 4,330 வெண்டிலேட்டர்கள், 3 லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகள் பெறப்பட்டு மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டி ருக்கின்றன.

வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் இந்த உதவிகளை மாநிலங்களுக்கு முறைப்படியாக பகிர்ந்தளிப்பதற்கான உரிய நடைமுறையை மத்திய அரசு வகுத்துள்ளது.

அவ்வாறு மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விரிவாக கண்காணித்து வருகிறது. இதற்கென ஒரு ஒருங்கிணைப்பு மையமும் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 26-ந்தேதி முதல் செயல்பட்டு வருகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News