செய்திகள்
சோட்டா ராஜன்

தாதா சோட்டா ராஜன் உயிரிழக்கவில்லை- திகார் சிறை நிர்வாகம் விளக்கம்

Published On 2021-05-08 03:15 GMT   |   Update On 2021-05-08 03:15 GMT
மும்பையை சேர்ந்த பிரபல நிழல் உலக தாதா சோட்டா ராஜன் மீது கொலை, கொள்ளை, கடத்தல் என 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
மும்பை:

வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த அவர், கடந்த 2015-ம் ஆண்டு இந்தோனேசியாவில் பிடிபட்டார். பின்னர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். பல்வேறு வழக்குகளை சந்தித்து வரும் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.



இந்தநிலையில் கடந்த மாதம் 22-ந் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சோட்டா ராஜன், 24-ந் தேதி டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்ததாக தகவல்கள் பரவின.

இந்த பரபரப்பான நிலையில், அவரது மரண செய்தியை திகார் சிறை நிர்வாகம் மறுத்தது. இதுகுறித்து சிறைத்துறை டி.ஜி.பி. சந்தீப் கோயல் கூறுகையில், ‘‘சோட்டா ராஜன் உயிரிழந்ததாக பரவி வரும் செய்தி தவறானது’’ என்றார்.

மும்பை குண்டுவெடிப்பு சதிகாரரான நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளியாக செயல்பட்டு வந்த சோட்டா ராஜன் பின்னர் அவரிடம் இருந்து பிரிந்து தனக்கென ஒரு தாதா சாம்ராஜ்யத்தை உருவாக்கி கொண்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News