செய்திகள்
கொரோனாவுக்கு பலி

கர்நாடகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 592 பேர் பலி

Published On 2021-05-08 02:51 GMT   |   Update On 2021-05-08 02:51 GMT
கர்நாடகத்தில் கொரோனாவுக்கு புதிய உச்சமாக ஒரே நாளில் 592 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் புதிதாக 48,781 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு :

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை நேற்றைய பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 58 ஆயிரத்து 902 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 48 ஆயிரத்து 781 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 18 லட்சத்து 38 ஆயிரத்து 885 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 592 பேர் உயிரிழந்தனர்.

இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 804 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 28 ஆயிரத்து 623 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர்.

இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து 12 லட்சத்து 84 ஆயிரத்து 420 பேர் மீண்டுள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 36 ஆயிரத்து 641 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக பார்க்கும்போது பெங்களூருவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 21 ஆயிரத்து 376 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாகல்கோட்டையில் 661 பேர், பல்லாரியில் 1,284 பேர், பெலகாவியில் 965 பேர், பெங்களூரு புறநகரில் 959 பேர், பீதரில் 437 பேர் என பாதிக்கப்பட்டுள்ளனர்.

சாம்ராஜ்நகரில் 725 பேர், சிக்பள்ளாப்பூரில் 734 பேர், சிக்கமகளூருவில் 632 பேர், சித்ரதுர்காவில் 126 பேர், தட்சிண கன்னடாவில் 1,633 பேர், தாவணகெரேயில் 538 பேர், தார்வாரில் 942 பேர், கதக்கில் 248 பேர், ஹாசனில் 2,422 பேர், ஹாவேரியில் 214 பேர், கலபுரகியில் 1,722 பேர், குடகில் 622 பேர், கோலாரில் 828 பேர், கொப்பலில் 523 பேர், மண்டியாவில் 1,110 பேர், மைசூருவில் 2,246 பேர், ராய்ச்சூரில் 762 பேர், ராமநகரில் 501 பேர், சிவமொக்காவில் 563 பேர், துமகூருவில் 3,040 பேர், உடுப்பியில் 976 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரகன்னடாவில் 833 பேர், விஜயாப்புராவில் 445 பேர், யாதகிரியில் 714 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 346 பேரும், பல்லாரியில் 24 பேரும், பெங்களூரு புறநகரில் 12 பேரும், பீதரில் 5 பேரும், சாம்ராஜ்நகரில் 7 பேரும், சிக்பள்ளாப்பூரில் 7 பேரும், சிக்கமகளூருவில் 4 பேரும், தட்சிண கன்னடாவில் 7 பேரும், தார்வாரில் 7 பேரும், கதக்கில் 3 பேரும், ஹாசனில் 20 பேரும், ஹாவேரியில் 9 பேரும், கலபுரகியில் 19 பேரும், குடகில் 10 பேரும், மண்டியாவில் 11 பேரும், மைசூருவில் 22 பேரும், ராய்ச்சூரில் 4 பேரும், ராமநகரில் 10 பேரும், சிவமொக்காவில் 14 பேரும்,

துமகூருவில் 15 பேரும், உடுப்பியில் 6 பேரும், உத்தரகன்னடாவில் 12 பேரும், விஜயாப்புராவில் 6 பேரும் என இவர்கள் உள்பட மொத்தம் 592 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தில் கொரோனா உயிரிழப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 592 பேர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்பை கண்டு கர்நாடக அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. மாநில மக்களும் அச்சம் அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ், சூறாவளியை போல் கர்நாடகத்தை சுழற்றி சுழற்றி தாக்கி வருகிறது.

ஆனால் கர்நாடக அரசு இதுவரை முழு ஊரடங்கை அமல்படுத்த தயக்கம் காட்டி வருகிறது என பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதே நிலை தொடர்ந்து நீடித்தால் அடுத்து வரும் நாட்களில் நிலைமை படுமோசம் அடையும் என்றும் மருத்துவ நிபுணர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News