செய்திகள்
மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி கூறியதாக வைரலாகும் தகவல்

Published On 2021-05-05 05:35 GMT   |   Update On 2021-05-05 05:35 GMT
தேர்தல் பரப்புரையின் போது மம்தா கூறியது என்னவானது எனும் கேள்வியுடன் சமூக வலைதளங்களில் பதிவு வைரலாகி வருகிறது.


மேற்கு வங்க மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

இந்த நிலையில், நந்திகிராம் தொகுதியில் தோல்வியடைந்தால் அரசியலில் இருந்து விலகுவதாக மம்தா பானர்ஜி தெரிவித்ததார கூறும் தகவல் பேஸ்புக்கில் வலம்வருகிறது. 

`இவருக்கு வெட்கம் இல்லையா? 1622 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்று இருக்கிறார். நந்திகிராமில் தோல்வியடைந்தால் அரசியலில் இருந்து விலகுவதாக கூறி தற்போது அதில் இருந்து பின்வாங்குகிறார்.' என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.



வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், மம்தா பானர்ஜி அவ்வாறு தெரிவிக்கவில்லை என தெரியவந்தது. மேலும் அவரை எதிர்த்து நந்திகிராமில் போட்டியிட்ட சுவென்டு தான் மம்தாவை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிப்பதாக தெரிவித்தார். எனினும், அவர் 1956 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அந்த வகையில் மம்தா கூறியதாக குறிப்பிடப்பட்டு இருக்கும் தகவல்களில் துளியும் உண்மையில்லை என தெரியவந்துள்ளது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News