செய்திகள்
தடுப்பூசி போடும் பணி

தடுப்பூசிக்கு புதிய ஆர்டர் கொடுக்கவில்லை என்பது உண்மையல்ல -சுகாதாரத்துறை

Published On 2021-05-03 10:29 GMT   |   Update On 2021-05-03 10:29 GMT
கொரோனா தடுப்பூசி மருந்து கொள்முதல் செய்வதற்கு புதிதாக மத்திய அரசு ஆர்டர் கொடுக்கவில்லை என்று செய்தி வெளியானது.
புதுடெல்லி:

இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. இதில் கோவிஷீல்டு மருந்தை புனேவில் உள்ள சீரம் நிறுவனமும், கோவேக்சின் மருந்தை ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனமும் தயாரித்து வருகின்றன.

இந்த நிறுவனங்களுக்கு அரசு ஆர்டர் கொடுத்திருந்த மருந்துகளை இந்த மாதம் மத்தியில் சப்ளை செய்து முடித்துவிடுவோம் என்று மருந்து நிறுவனங்கள் கூறி உள்ளன. மேலும் மருந்து கொள்முதல் செய்வதற்கு புதிதாக மத்திய அரசு இதுவரை ஆர்டர் கொடுக்கவில்லை என்றும் செய்தி வெளியானது.



இந்த தகவலை மறுத்துள்ள மத்திய சுகாதாரத்துறை, கொரோனா தடுப்பூசிகளுக்கு புதிய ஆர்டரை மத்திய அரசு கொடுக்கவில்லை என்ற ஊடக தகவல்கள் முற்றிலும் தவறானவை என கூறி உள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசி சப்ளைக்காக கடைசியாக கொடுக்கப்பட்ட 10 கோடி டோஸ் ஆர்டரில் மே 3ம் தேதி வரை 8.744 கோடி டோஸ் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு, 5 கோடி கோவேக்சின் தடுப்பூசி டோஸ்களுக்காக ரூ.787.50 கோடி பாரத் பயோடெக்கிற்கு வழங்கப்பட்டுள்ளது’ என்றும் சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.
Tags:    

Similar News