செய்திகள்
ராகுல் காந்தி

இது உயிரிழப்பா அல்லது கொலையா? -ஆக்சிஜன் பற்றாக்குறை மரணம் குறித்து கேள்வி எழுப்பிய ராகுல்

Published On 2021-05-03 08:21 GMT   |   Update On 2021-05-03 08:21 GMT
சிஸ்டம் விழித்தெழுவதற்கு முன் இன்னும் எவ்வளவு துன்பங்கள் வருமோ? என்றும் ராகுல் வேதனை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:

நாட்டில் கொரோனா வைரஸ் ஒருபுறம் மக்களை பலி வாங்கி வரும் நிலையில், மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல்வேறு மருத்துவமனைகளில் நோயாளிகள் உயிரிழக்கும் அவலம் தொடர்கிறது. 

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்ட மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றம் பிற காரணங்களால் கொரோனா நோயாளிகள் உள்பட 24 நோயாளிகள் இறந்துள்ளனர். 



இந்த செய்தியை மேற்கோள் காட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், உயிரிழப்பா அல்லது கொலையா? என கேள்வி எழுப்பி உள்ள ராகுல் காந்தி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும், சிஸ்டம் விழித்தெழுவதற்கு முன் இன்னும் எவ்வளவு துன்பங்கள் வருமோ? என்றும் ராகுல் வேதனை தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News