செய்திகள்
அசாம் முதல்வர் சர்பானந்த் சோனாவால்

அசாம், கேரளா, புதுச்சேரியிலும் இன்று வாக்கு எண்ணிக்கை

Published On 2021-05-02 00:22 GMT   |   Update On 2021-05-02 00:22 GMT
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று காலை எட்டு மணிக்கு துவங்குகிறது.
புதுடெல்லி:

தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.

கடந்த மார்ச் 27-ம் தேதி முதல் தேர்தல் தொடங்கியது. 5 மாநிலங்களில் உள்ள 18 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வெவ்வேறு கட்டங்களாக நடந்த தேர்தல்களில் தங்கள் ஓட்டுகளைப் பதிவு செய்தனர். மொத்தம் 824 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

கேரளாவில் உள்ள 140 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. கேரளாவில் இடதுசாரி கட்சியும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் போட்டியிட்டன.

அசாமில் உள்ள 126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக நடந்த தேர்தலில் பா.ஜ.க, இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சிகள் போட்டியிட்டன.



ஏப்ரல் 6-ல் புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் நடந்த தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கும், என் ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் கடும் போட்டி நிலவியது.

இதேபோல், கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கையும் இன்று நடக்கிறது.

இந்நிலையில், அசாம், கேரளா, புதுச்சேரியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை எட்டு மணிக்கு தொடங்குகிறது. பிற்பகலுக்குள் முன்னிலை நிலவரம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News