செய்திகள்
அலகாபாத் ஐகோர்ட்டு

உ.பி.யில் மக்களுக்கு ஆக்சிஜன் வழங்க முடியாதது வெட்க கேடானது - அலகாபாத் ஐகோர்ட்டு கண்டனம்

Published On 2021-04-29 07:09 GMT   |   Update On 2021-04-29 07:09 GMT
135 அரசு ஊழியர்கள் உயிரிழந்த விவகாரத்தில் மாநில தேர்தல் ஆணையம் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அலகாபாத் ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அலகாபாத்:

உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறியது, ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பாக பொதுநல வழக்கு ஒன்று அலகாபாத் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு மக்களுக்கு ஆக்சிஜன் வழங்க முடியாதது வெட்க கேடானது என்று கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக அலகாபாத் ஐகோர்ட்டு கூறியதாவது:-

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் மக்களுக்கு ஆக்சிஜன் வழங்க முடியாதது வெட்க கேடானது. அரசு மருத்துவமனைகளில் முறையான மின்சாரம், போதிய கழிப்பறை வசதிகள் இல்லை.

கொரோனா தடுப்பு விவகாரத்தில் யோகி ஆதித்ய நாத் அரசு நீதிமன்றத்தின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும்.


மேலும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 14 நாட்கள் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு கோர்ட்டு தெரிவித்தது. மேலும் 135 அரசு ஊழியர்கள் உயிரிழந்த விவகாரத்தில் மாநில தேர்தல் ஆணையம் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

Tags:    

Similar News