செய்திகள்
வாக்களிக்க காத்திருக்கும் மக்கள்

மேற்கு வங்காளத்தில் இறுதிகட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

Published On 2021-04-29 01:53 GMT   |   Update On 2021-04-29 01:53 GMT
மேற்கு வங்காளத்தில் 35 தொகுதிகளுக்கான 8-வது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.
கொல்கத்தா: 

தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களுடன் மேற்கு வங்காளமும் சட்டப்பேரவை தேர்தலை சந்தித்து வருகிறது. அந்த மாநிலத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல்கட்ட தேர்தல் கடந்த மார்ச் 27-ந்தேதி நடந்த நிலையில், 8-வது மற்றும் இறுதிகட்ட தேர்தல் இன்று (ஏப்.29-ந்தேதி) தொடங்கி நடைபெற்று வருகிறது. மால்டா பாகம் 2, கொல்கத்தா வடக்கு, முர்ஷிதாபாத் பாகம் 2, பிர்பும் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 35 தொகுதிகள் இன்று தேர்தலை சந்திக்கின்றன.

35 பெண்கள் உள்பட 283 வேட்பாளர்கள், இறுதிகட்ட தேர்தல் களத்தில் உள்ளனர். அவர்களின் வெற்றி, தோல்வியை 84 லட்சத்து 77 ஆயிரத்து 728 வாக்காளர்கள் தீர்மானிக்கப்போகின்றனர்.



மொத்தம் உள்ள 11 ஆயிரத்து 860 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6.30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். தேர்தல் நடைபெறும் 35 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த இறுதிகட்ட தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு, மம்தா பானர்ஜி தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியைத் தக்கவைப்பதற்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.
Tags:    

Similar News