செய்திகள்
தலைமை தேர்தல் ஆணையம்

வேட்பாளர்கள், பூத் ஏஜெண்டுகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் -தேர்தல் ஆணையம் உத்தரவு

Published On 2021-04-28 10:24 GMT   |   Update On 2021-04-28 10:24 GMT
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களுக்கு வெளியே பொதுமக்கள், தொண்டர்கள் கூடக்கூடாது என தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்படுகின்றன. இதற்காக விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. குறிப்பாக, கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால், தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை அன்று கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

அதில், வாக்கு எண்ணும் மையங்களுக்கு வரும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கொண்டு வருவது அவசியம், அல்லது தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்றிதழை கொண்டு வரவேண்டும் என கூறப்பட்டுள்ளது. 



“வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வெளியே பொதுமக்கள், தொண்டர்கள் கூடக்கூடாது. வாக்கு எண்ணும் மையங்களுக்கு வரும் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படவேண்டும். சானிடைசர் வழங்கி, கைகளை சுத்தம் செய்ய வைக்க வேண்டும்.

வாக்கு எண்ணும் மையங்கள், சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் பெரிய அளவில் போதிய காற்றோட்டத்துடன் இருக்கவேண்டும். வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும். வாக்குப்பதிவு எந்திரங்கள், விவிபேட் எந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் சீல்வைக்கப்பட்ட பெட்டிகளுக்கும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, வாக்கு எண்ணும் அறைகளின் அளவிற்கு ஏற்ப, டேபிள்களின் எண்ணிக்கை அனுமதிக்கப்படும்” என்றும் தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.
Tags:    

Similar News