செய்திகள்
இந்திய பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் சுகா யோஷிஹைட்

கொரோனா சவால்களை சமாளிப்பது எப்படி? ஜப்பான் பிரதமருடன் மோடி ஆலோசனை

Published On 2021-04-26 11:08 GMT   |   Update On 2021-04-26 11:08 GMT
கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், பிரதமர் மோடி இன்று ஜப்பான் பிரதமர் சுகா யோஷிஹைடை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3.5 லட்சத்தை தாண்டி பதிவாகியது. பெருநகரங்களில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில் படுக்கைகள் முழுவதும் நிரம்பிவிட்டன. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் செயலாற்றி வருகின்றன. சூழலுக்கு ஏற்ப, இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. 

தடுப்பூசி, மருத்துவ ஆக்சிஜன் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்தியாவிற்கு பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி உள்ளன. 



இந்நிலையில், பிரதமர் மோடி இன்று ஜப்பான் பிரதமர் சுகா யோஷிஹைடை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, இரு நாடுகளிலும் உள்ள கொரோனா நிலவரம் மற்றும் இந்த பெருந்தொற்றின் தாக்கத்தினால் ஏற்படும் பல்வேறு சவால்கள் குறித்து இருவரும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

இந்த சவால்களை சமாளிப்பதற்கு இந்தியா-ஜப்பான் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அவர்கள் எடுத்துரைத்தனர். நம்பகமான விநியோகச் சங்கிலிகளை உருவாக்க ஒன்றிணைந்து செயல்படுவது, முக்கியமான பொருள் மற்றும் தொழில்நுட்பங்களின் விநியோகத்தை உறுதி செய்தல், உற்பத்தி மற்றும் திறன் மேம்பாட்டில் புதிய கூட்டாண்மைகளை உருவாக்குதல் குறித்து பேசியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News