செய்திகள்
ராகுல் காந்தி

ஜன் கி பாத் முக்கியம்... மத்திய அரசை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி

Published On 2021-04-25 07:38 GMT   |   Update On 2021-04-25 07:38 GMT
காங்கிரஸ் கட்சியினர் அனைத்து அரசியல் பணிகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் வழங்கும்படி ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
புதுடெல்லி:

நாட்டில் கொரோனா வைரசின் கோரப்பிடி நாளுக்கு நாள் இறுகி வரும் நிலையில், பிரதமர் மோடி இன்று மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது, கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை நாட்டையே உலுக்கியிருப்பதாகவும், மாநிலங்களுக்கு உதவ மத்திய அரசு அனைத்து சக்தியுடனும் செயல்படுவதாகவும் கூறினார்.

இந்நிலையில், பிரதமரின் மன் கி பாத் உரை மற்றும் கொரோனா விஷயத்தில் மத்திய அரசின் அணுகுமுறையை விமர்சிக்கும் வகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.



அதில், “சிஸ்டம் தோல்வி அடைந்துவிட்டது. எனவே, ‘ஜன் கி பாத்’ (மக்களின் குரல்) முக்கியம். இந்த நெருக்கடியான சமயத்தில், நாட்டிற்கு பொறுப்பான குடிமக்கள் தேவை. எனது காங்கிரஸ் நண்பர்கள் அனைத்து அரசியல் பணிகளையும் விட்டுவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் வழங்கி, நம் நாட்டு மக்களின் வலியைக் குறைக்க வேண்டும்” என கூறி உள்ளார்.
Tags:    

Similar News