செய்திகள்
திருப்பதி கோவில்

திருப்பதி வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தது

Published On 2021-04-24 09:09 GMT   |   Update On 2021-04-24 09:09 GMT
திருப்பதியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் அங்கு வந்த பக்தர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் அவதிப்பட்டனர்.

திருப்பதி:

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு திருப்பதியில் இரவு நேர ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்தது.

நேற்று மாலை 7 மணி முதல் இன்று காலை 6 மணி வரை கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது.

திருப்பதியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் அங்கு வந்த பக்தர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் அவதிப்பட்டனர்.

திருப்பதியில் ஆன்லைன் மூலம் 25 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட், வி.ஐ.பி. பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட் பெற்ற 2 ஆயிரம் பக்தர்கள் நன்கொடையாளர்கள் ஆயிரம் என தரிசன டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

ஏழுமலையான் தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் காலை 9 மணிக்கு பின்னர் நடைபாதை வழியாகவும், மதியம் 1 மணிக்கு பின்னர் மலைப்பாதை வழியாகவும் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

திருப்பதியில் நேற்று 12,679 பக்தர்கள் தரிசனம் செய்தனர். ரூ.1.67 கோடி உண்டியல் வசூலாகியுள்ளது.

இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

Tags:    

Similar News