செய்திகள்
கோப்புப்படம்

பா.ஜனதாவின் இலவச தடுப்பூசி வாக்குறுதி: பீகார் தேர்தலை நியாபகப்படுத்திய திரிணாமுல் காங்கிரஸ்

Published On 2021-04-23 12:07 GMT   |   Update On 2021-04-23 12:07 GMT
திரிணாமுல் காங்கிரஸ் இலவச தடுப்பூசி செலுத்தப்படும் எனக் கூறிய நிலையில், பா.ஜனதாவும் அதே வாக்குறுதியை அளித்திருக்கிறது.
மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. 6 கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டது. 7-ம் கட்ட தேர்தல் வருகிற 26-ந்தேதியும், 8-ம் கட்ட தேர்தல் 29-ந்தேதியும் நடக்கிறது.

கோவிஷீல்டு தடுப்பூசி நிறுவனம் மத்திய அரசு, மாநில அரசு, தனியார் நிறுவனங்கள் என மூன்று மாதிரியான விலைப்பட்டியலை வெளியிட்டது. இதற்கு மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசு விலைக்கு மாநிலங்களுக்கும் வழங்க வேண்டும். மத்திய அரசு இலவசமாக தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும் என தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் நேற்று, மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் மே 5-ந்தேதியில் இருந்து மேற்கு வங்காள மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்தது.

இந்த நிலையில் இன்ற பா.ஜனதா, அதனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், விரைவில் மேற்கு வங்காளத்தில் ஆட்சியை பிடித்த பின், மக்களுக்கு இலவச தடுப்பூசி வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கிறோம் என்று தெரிவித்திருந்தது.

.இதை சுட்டிக்காட்டிய திரிணாமுல் காங்கிரஸ், பீகாரில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவிய நிலையில், இதுபோன்று வாக்குறுதி அளித்தது. பின்னர் அதை மறந்துவிட்டது. அதேபோன்றுதான் மேற்கு வங்காளத்தையும் மறந்து விடும் என விமர்சனம் செய்துள்ளது.

தற்போது இலவச தடுப்பூசி மேற்கு வங்காளத்தில் தேர்தல் வாக்குறுதியாக மாறியுள்ளது.
Tags:    

Similar News