செய்திகள்
ராகுல் காந்தி

ஆக்சிஜன் பற்றாக்குறை, அதிகரிக்கும் மரணங்கள்... மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Published On 2021-04-23 09:12 GMT   |   Update On 2021-04-23 09:12 GMT
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியதுடன், தினசரி உயிரிழப்பும் 2 ஆயிரத்தை தாண்டி பதிவாகிறது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரசின் 2வது அலை உக்கிரமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியதுடன், தினசரி உயிரிழப்பும் 2 ஆயிரத்தை தாண்டி பதிவாகிறது. இதுதவிர,  ஆக்சிஜன் பற்றாக்குறை தற்போது பெரிய பிரச்சனையாக உள்ளது. ஆக்சிஜன் சப்ளையை தடையின்றி வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு அதிகரிப்பு மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு மத்திய அரசே பொறுப்பு என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்.  



இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “கொரோனா தாக்கினால் உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்துவிடும். ஆனால், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் போதிய படுக்கையில்லாத காரணங்களால் அதிகமான உயிரிழப்பு ஏற்படுகிறது. இதற்கு மத்திய அரசே பொறுப்பு” என்று கூறியுள்ளார்.
Tags:    

Similar News