செய்திகள்
கோப்புப்படம்

இந்தியாவில் போடப்பட்டுள்ள தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 13.23 கோடியை கடந்தது

Published On 2021-04-22 19:55 GMT   |   Update On 2021-04-22 19:55 GMT
நாடு முழுவதும் 13.23 கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டிருந்தாலும், இதில் 8 மாநிலங்கள் மட்டுமே சுமார் 60 சதவீத டோஸ்களை பெற்றிருக்கின்றன.
புதுடெல்லி:

இந்தியாவில் பல்வேறு கட்டங்களாக தடுப்பூசி பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உலகிலேயே மிகப்பெரிய தடுப்பூசி திட்டமான இந்த பணிகள் மூலம் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

இதனால் போடப்பட்ட ஒட்டுமொத்த டோஸ்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி 13 கோடியே 23 லட்சத்து 30 ஆயிரத்து 644 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டு விட்டன.



இதில் முந்தைய 24 மணி நேரத்தில் மட்டுமே 22 லட்சத்துக்கு மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டு இருந்தன. இதில் 15 லட்சத்து ஆயிரத்து 704 பயனாளிகள் முதல் டோசும், 7 லட்சத்து 9 ஆயிரத்து 630 பேர் 2-வது டோசும் போட்டிருந்தனர்.

நாடு முழுவதும் 13.23 கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டிருந்தாலும், இதில் 8 மாநிலங்கள் மட்டுமே சுமார் 60 சதவீத டோஸ்களை பெற்றிருக்கின்றன.

இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
Tags:    

Similar News