செய்திகள்
கோப்பு படம்.

மராட்டியத்தில் இன்று புதிதாக 67,013 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று

Published On 2021-04-22 15:42 GMT   |   Update On 2021-04-22 15:42 GMT
மராட்டியத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 568 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62,479 ஆக உயர்ந்துள்ளது.
மும்பை:

மராட்டிய மக்களை கொரோனாவின் 2-வது அலை பந்தாடி வருகிறது. கொரோனாவின் ஆதிக்கத்தால் மக்கள் சாரை சாரையாக நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். உயிர் பலியும் கட்டுக்கடங்காமல் ஏற்பட்டு வருகிறது. நோய் பரவல் சங்கிலியை உடைக்க மாநில அரசு கடந்த 14-ந் தேதி முதல் மே 1-ந் தேதி வரை கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. எனினும் மாநிலத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறையவில்லை.

இந்நிலையில் மராட்டியத்தில் இன்று 67,013 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,94,840 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 568 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62,479 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 62,298 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 33,30,747 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 6,99,858 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News