செய்திகள்
உள்துறை அமைச்சகம்

மாநிலங்கள் இடையே ஆக்சிஜனை கொண்டு செல்ல தடை கூடாது -மத்திய அரசு உத்தரவு

Published On 2021-04-22 10:29 GMT   |   Update On 2021-04-22 10:29 GMT
கொரோனாவின் 2வது அலையை கருத்தில் கொண்டு தடையில்லா ஆக்சிஜன் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாடு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவமனைகளுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளிட்ட சுகாதார அவசர நிலை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.

இந்நிலையில், மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், மருத்துவ ஆக்சிஜனை ஒரு மாநிலத்தில் இருந்து, மற்றொரு மாநிலத்திற்கு கொண்டு செல்ல தடை இருக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. 



ஆக்சிஜன் கொண்டு செல்லும் வாகனங்களை அதிகாரிகள் தடுக்கக் கூடாது, அந்த வாகனங்களுக்கு நேர கட்டுப்பாடு உட்பட எந்த தடையும் விதிக்கக்கூடாது  என்றும் கூறி உள்ளது.

கொரோனாவின் 2வது அலையை கருத்தில் கொண்டு தடையில்லா ஆக்சிஜன் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News