செய்திகள்
எய்ம்ஸ் மருத்துவர்கள்

இந்த அறிகுறிகள் இருந்தால் கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் - எய்ம்ஸ் மருத்துவர்கள்

Published On 2021-04-21 15:17 GMT   |   Update On 2021-04-21 15:17 GMT
இந்தியா, கொரோனாவின் முதல் அலையை வெற்றிகரமாக சமாளித்து விட்டது. இரண்டாவது அலை இந்தியாவை கடுமையாக தாக்கி வருகிறது.
புதுடெல்லி:

இந்தியா, கொரோனாவின் முதல் அலையை வெற்றிகரமாக சமாளித்து விட்டது. இரண்டாவது அலை இந்தியாவை கடுமையாக தாக்கி வருகிறது. தினந்தோறும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த தொற்றின் பிடியில் சிக்கி வருகின்றனர். இந்த இரண்டாது அலையை வெற்றி கொள்ள நாடு தொடர்ந்து போராடி வருகிறது.

இந்நிலையில் எந்த எந்த அறிகுறி இருந்தால் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என  எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறியிருப்பதாவது:-

உடல்வலி, சளி, இருமல், அஜீரணம் வாந்தி போன்ற அறிகுறி இருந்தால் கொரோனா பரிசோதனை செய்யவேண்டும். 



உடலில் ஆக்சிஜன் அளவும் 93-99% இருந்தால் ஆக்சிஜன் தனியே தேவையில்லை. உங்கள் செறிவூட்டல் 94% க்கு மேல் இருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை. 

சரியான நேரத்தில் சரியான சிகிச்சையைப் பெறுவது முக்கியம் ஆகும்.
Tags:    

Similar News