செய்திகள்
கோப்புப்படம்

மிசோரமில் 7 நாட்கள் முழு ஊரடங்கு அமல்

Published On 2021-04-20 23:26 GMT   |   Update On 2021-04-20 23:26 GMT
மிசோரம் மாநிலத்தில் கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது.
அய்சால்:

மிசோரம் மாநிலத்தில் கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், தலைநகர் அய்சால் மற்றும் மாநிலத்தின் 10 மாவட்ட தலைநகரங்களில் நேற்று அதிகாலை 4 மணி முதல் வருகிற 26-ந் தேதி அதிகாலை 4 மணி வரை 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த புதிய உத்தரவின்படி அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்கள், கல்விநிறுவனங்கள், பூங்காங்கள், சுற்றுலா தலங்கள், சினிமா தியேட்டர்கள், உடற்பயிற்சி மையங்கள், சமுதாய கூடங்கள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள் மூடப்பட்டு உள்ளன. இந்தநாட்களில் ஏற்கனவே அமலில் உள்ள இரவு ஊரடங்கை இரவு 8.30 மணி முதல் அதிகாலை 4 மணி வரை கடுமையாக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. முழு ஊரடங்கு நாட்களில் மக்கள் தேவையின்றி வீடுகளில் இருந்து வெளியே வரக் கூடாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News