செய்திகள்
நிர்மலா சீதாராமன்

வளர்ச்சியை நிலைநிறுத்த அரசு-தொழில்துறை இடையே முழு நம்பிக்கை வேண்டும் - நிர்மலா சீதாராமன் கருத்து

Published On 2021-04-20 19:52 GMT   |   Update On 2021-04-20 19:52 GMT
கொரோனா இரண்டாவது அலைக்கிடையே பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்ட மத்திய அரசு எண்ணற்ற நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் தொழில், வர்த்தக கூட்டமைப்பு ஏற்பாடு செய்த கருத்தரங்கில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது:-

கொரோனா இரண்டாவது அலைக்கிடையே பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்ட மத்திய அரசு எண்ணற்ற நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. வளர்ச்சியை நிலைநிறுத்த மத்திய அரசுக்கும், தொழில்துறையினருக்கும் இடையே முழு நம்பிக்கை நிலவ வேண்டும். அவநம்பிக்கைக்கு இட்டுச்செல்லும் எந்த நிகழ்வுகளும் நடக்கக்கூடாது.

மேற்கு வங்காளத்தில் உள்ள தொழில்கள் செழித்து வளர நிறைய ‘ஆக்சிஜன்’ தேவைப்படுகிறது. முன்பு, தொழில்களால் மிளிர்ந்த கொல்கத்தா, பழைய நிலையை அடைய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினாா்.
Tags:    

Similar News