செய்திகள்
ராகுல் காந்தி

லடாக்கில் படைகளை விலக்க சீனா மறுப்பு : மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Published On 2021-04-19 23:02 GMT   |   Update On 2021-04-19 23:02 GMT
இந்தியா-சீனா இடையே கிழக்கு லடாக் எல்லையில் மோதல் ஏற்பட்ட நிலையில், அங்குள்ள பங்கோங் சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் இருந்து இரு நாடுகளும் தங்கள் படைகளை திரும்பப்பெற்று உள்ளன.
புதுடெல்லி:

இந்தியா-சீனா இடையே கிழக்கு லடாக் எல்லையில் மோதல் ஏற்பட்ட நிலையில், அங்குள்ள பங்கோங் சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் இருந்து இரு நாடுகளும் தங்கள் படைகளை திரும்பப்பெற்று உள்ளன.

அங்குள்ள ஹாட்ஸ்பிரிங்ஸ், கோக்ரா, தேப்சாங் போன்ற இடங்களில் இருந்தும் படைகளை திரும்பப்பெற வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக இந்த மாத தொடக்கத்தில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தையும் நடத்தின.

ஆனால் மேற்படி ஹாட்ஸ்பிரிங்ஸ், கோக்ரா, தேப்சாங் போன்ற பகுதிகளில் இருந்து படைகளை விலக்க சீனா மறுப்பு தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



இந்த விவகாரத்தில் மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘கோக்ரா-ஹாட்ஸ்பிரிங்ஸ், தேப்சாங் பகுதிகளில் சீனாவின் ஆக்கிரமிப்பு இந்தியாவின் மூலோபாய நலன்களுக்கும், டி.பி.ஓ. விமானப்படை தளத்துக்கும் நேரடி அச்சுறுத்தல் ஆகும். மத்திய அரசின் வீணான பேச்சுவார்த்தைகளால் நாட்டின் பாதுகாப்பு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

இரு நாட்டு பேச்சுவார்த்தைகள் எந்தவித பலன்களையும் அளிக்காதது ஏன்? என காங்கிரஸ் கட்சியும் முன்னதாக கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News