செய்திகள்
போதைப்பொருள்

மீன்பிடி படகில் ரூ. 3,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள்: மடக்கிப்பிடித்த கப்பற்படையினர்

Published On 2021-04-19 13:21 GMT   |   Update On 2021-04-19 13:21 GMT
அரபிக் கடலில் சந்தேகத்திற்குரிய வகையில் சென்ற படகை பிடித்து சோதனை செய்ததில் 300 கிலோ அளவிலான போதைப்பொருட்கள் சிக்கியுள்ளது.
அரபிக் கடலில் இந்திய கப்பற்படைக்கு சொந்தமான ஐஎன்ஸ் சுவர்னா கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கிறது.

அரபிக் கடலில் சந்தேகத்திற்குரிய வகையில் மீன்பிடி படகு அங்குமிங்குமாக சென்றுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த கப்பற்படை வீர்ரகள் அந்த படகை மடக்கி சோதனை செய்தனர். அப்போது படகில் 300 கிலோ அளவில் போதைப்பொருட்கள் இருப்பது தெரியவந்தது.



இதனால் படகில் உள்ளவர்களை கொச்சி துறைமுகத்திற்கு கைது செய்து கொண்டு வந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் சர்வதேச மார்க்கெட் விலையில் சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் என இந்திய கப்பற்படை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News