செய்திகள்
தாக்குதல் நடந்த பாஜக அலுவலகம்

மேற்கு வங்காளத்தில் மீண்டும் வன்முறை... பாஜக அலுவலகத்தில் குண்டுவீச்சு

Published On 2021-04-19 05:56 GMT   |   Update On 2021-04-19 05:56 GMT
தேர்தலில் தோல்வி அடைவதை தாங்கிக்கொள்ள முடியாமல் திரிணாமுல் காங்கிரசார் தாக்குதலை தொடங்கியிருப்பதாக பாஜக வேட்பாளர் கூறி உள்ளார்.
கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் தேர்தல் பிரசாரம் மற்றும் வாக்குப்பதிவின்போது ஆங்காங்கே மோதல் ஏற்பட்டது. பாஜகவும், திரிணாமுல் காங்கிரசும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டிவருகின்றனர். 

இந்நிலையில் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பானிஹாதி தொகுதியில் உள்ள பாஜக முகாம் அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி மர்மநபர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் வெடிக்காத ஒரு குண்டை கைப்பற்றினர்.



உள்ளூரைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரசார் இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக பாஜக குற்றம்சாட்டியது. ஆத்திரமடைந்த பாஜகவினர் திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகத்தை அடித்து நொறுக்கினர்.

இந்த தாக்குதல்பற்றி பாஜக வேட்பாளர் சன்மோய் பானர்ஜி கூறுகையில், தேர்தலில் தோல்வி அடைவது தெரிந்துவிட்டதால் திரிணாமுல் காங்கிரசார் தாக்குதலை தொடங்கியிருக்கிறார்கள், என குற்றம்சாட்டினார்.
Tags:    

Similar News