செய்திகள்
விமான சேவை

இந்திய விமானங்களுக்கு தடை விதித்தது ஹாங்காங்

Published On 2021-04-19 04:02 GMT   |   Update On 2021-04-19 04:02 GMT
கொரோனா அச்சம் காரணமாக பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கான விமான போக்குவரத்தையும் ஹாங்காங் தடை செய்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2.6 லட்சத்தை தாண்டி உள்ளது. இதனால் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கொரோனா அச்சம் காரணமாக இந்தியாவுடனான விமான போக்குவரத்தை ஹாங்காங் அரசு நிறுத்தி உள்ளது. நாளை முதல் 14 நாட்களுக்கு இந்தியாவில் இருந்து வரும் அனைத்து விமானங்களும் ஹாங்காங்கில் தரையிறங்க தடை விதிக்கப்பட்டிருப்பதாக அரசு அறிவித்துள்ளது. இதேபோல் பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கான விமான போக்குவரத்தையும் தடை செய்துள்ளது.



இந்த மாதம் இந்தியாவில் இருந்து விமானங்களில் ஹாங்காங் வந்த பயணிகளில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டதையடுத்து, இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. ஹாங்காங் நாட்டிற்கு வருவோர் தங்கள் பயணத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்து, பாதிப்பு இல்லை என்ற சான்றிதழுடன் வரவேண்டும் என உத்தரவிட்டிருந்தது. 

மும்பை-ஹாங்காங் வழித்தடத்தில் இயக்கப்படும் விஸ்த்ரா விமானங்களை மே 2ம் தேதி வரை ஹாங்காங் அரசு நேற்று ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News