செய்திகள்
கோப்புப்படம்

மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, ராஜஸ்தான் மாநில கொரோனா அப்டேட்ஸ்...

Published On 2021-04-18 15:29 GMT   |   Update On 2021-04-18 15:29 GMT
மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் கொரோனா தொற்றால் புதிதாக பாதித்தவர்களின் எண்ணிகை உச்சத்தை அடைந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68,631 ஆக உள்ளது. 45,654 பேர் குணமடைந்துள்ள நிலையில், 503 பேர் உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தில் இதுவரை 6,70,388 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 31,06,828 பேர் குணமடைந்துள்ள நிலையில், 60,473 பேர் உயிரிழந்துள்ளனர்.

குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10,340 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 3,981 பேர் குணமடைந்துள்ளனர். 110 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 4,04,561 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 61,647 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 3,37,545 பேர் குணமடைந்துள்ள நிலையில், 5377 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 25,462 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 20,159 பேர் குணமடைந்துள்ள நிலையில், 161 பேர் உயிரிழந்துள்ளனர். 74,941 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 7,66,398 பேர் குணமடைந்துள்ளனர். 12,121 பேர் உயிரிழந்துள்ளனர்.



ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று 10,514 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3084 பேர் குணமடைந்துள்ளனர். 42 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 414869 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 344331 பேர் குணமடைந்துள்ளனர். 3151 பேர் உயிரிழந்துள்ளனர். 67387 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Tags:    

Similar News