செய்திகள்
கோப்புப்படம்

பணத்தில் தமிழ்நாடு முதலிடம், மதுபானத்தில் அசாம்: தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விவரம்

Published On 2021-04-16 12:49 GMT   |   Update On 2021-04-16 13:05 GMT
சட்டசபை தேர்தல் நடைபெற்ற ஐந்து மாநிலங்களில் இதுவரை பறிமுதல் செய்த பணம், மதுபானம் குறித்த புள்ளி விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காள மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் நடைமுறை பயன்பாட்டிற்கு வந்தது.

தேர்தலின்போது கணக்கில் காட்டப்படாமல் அதிகமான அளவில் பணம் கொண்டு செல்லப்பட்டால் பறிமுதல் செய்யப்படும். அதேபோல் வாக்காளர்களுக்கு பரிசாக வழங்க பரிசுப் பொருட்கள் பதுக்கி வைத்திருந்த பொருட்களையும் அதிரடிப்படையினர் பறிமுதல் செய்தனர்.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று முடிவடைந்து விட்டது. மேற்கு வங்காளத்தில் நாளை 5-வது கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இன்னும் மூன்று கட்ட தேர்தல் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் தேர்தலின்போது பிறமுதல் செய்ய பொருட்கள், பணங்கள் குறித்த புள்ளி விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில் ரொக்கமாக 236.69 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரொக்கமாக அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்ட பட்டியலில் தமிழகம்தான் முதல் இடம். மேற்கு வங்காளத்தில் 50.71 கோடி ரூபாயும், அசாமில் 27.09 கோடி ரூபாயும், கேரளாவில் 22.88 கோடி ரூபாயும் புதுச்சேரியில் 5.52 கோடி ரூபாயும் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்டவைகளின் மதிப்பு இந்திய பணமதிப்பு கோடியில்...

மாநிலம்           ரொக்கம்      மதுபானம்

 தமிழ்நாடு          236.69                   05.27

மே.வங்காளம்      50.71                     30.11

புதுச்சேரி          05.52                     00.70

அசாம்             27.09                     41.97

கேரளா            22.88                     05.16


மேற்கு வங்காளத்தில் 41.97 கோடி ரூபாய் அளவில் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக மேற்கு வங்காளத்தில் 30.11 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானமும், தமிழ்நாட்டில் 5.27 கோடி ரூபாய் மதிப்பிலும், கேரளாவில் 5.16 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானமும், புதுச்சேரியில் 0.70 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பரிசுப்பொருட்களில் மேற்கு வங்காளத்தில் 88.39 கோடி ரூபாய் மதிபிலும், தமிழகத்தில் 25.64 கோடி ரூபாய் மதிப்பிலும், அசாமில் 15.18 கோடி ரூபாய் மதிப்பிலும், புதுச்சேரியில் 3.06 கோடி ரூபாய் மதிப்பிலும், கேரளாவில் 1.95 கோடி ரூபாய் மதிப்பிலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News