செய்திகள்
நிதின் கட்காரி

கொரோனாவை எதிர்த்து போராட நீண்டகால ஏற்பாடு தேவை: நிதின் கட்காரி

Published On 2021-04-16 02:35 GMT   |   Update On 2021-04-16 02:35 GMT
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் ஊசி மருந்து தயாரிக்க 4 நிறுவனங்களுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்பட்டு இருந்தது. தற்போது மேலும் 8 நிறுவனங்களுக்கு மருந்தை உற்பத்தி செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
மும்பை :

மராட்டியத்தில் கொரோனா நோய் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இந்த நிலையில் மாநிலத்தின் 2-வது தலைநகராக கருதப்படும் நாக்பூரில் உள்ள தேசிய புற்றுநோய் மையத்தில் 100 படுக்கைகள் கொண்ட கொரோனா பராமரிப்பு மையத்தை மத்திய மந்திரி நிதின் கட்காரி நேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிசும் கலந்துகொண்டார்.

அப்போது நிதின் கட்காரி பேசியதாவது:-



கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் வெற்றிபெற நீண்டகால ஏற்பாடுகளை செய்யவேண்டிய தேவை உள்ளது.

தற்போது மாநிலத்தின் நிலைமை மிகவும் தீவிரமானது. இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது யாருக்கும் தெரியாது. மக்கள் சிறந்ததை சிந்திக்க வேண்டும் ஆனால் மோசமாவதை ஏற்கவும் தயாராக இருக்கவேண்டும்.

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் ஊசி மருந்து தயாரிக்க 4 நிறுவனங்களுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்பட்டு இருந்தது. தற்போது ரெம்டெசிவிர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மேலும் 8 நிறுவனங்களுக்கு மருந்தை உற்பத்தி செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News