செய்திகள்
மந்திரி சுரேஷ்குமார்

1 முதல் 9-ம் வகுப்பு வரை தேர்வு இன்றி தேர்ச்சியா?: மந்திரி சுரேஷ்குமார் தகவல்

Published On 2021-04-16 02:05 GMT   |   Update On 2021-04-16 02:05 GMT
கர்நாடகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வு இன்றி தேர்ச்சி செய்யப்படுவது குறித்து பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.
பெங்களூரு :

நாட்டில் கொரோனா பரவல் ருத்ரதாண்டவமாடி வருகிறது. நேற்று ஒரே நாளில் 1¾ லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கர்நாடகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வு இன்றி தேர்ச்சி செய்யப்படுவது குறித்து பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வு இன்றி தேர்ச்சி செய்வது குறித்து இன்னும் 2 நாட்களில் முடிவு எடுக்கப்படும். சி.பி.எஸ்.இ.யை போல் கர்நாடகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்வது குறித்து அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை.

ஏனென்றால் அந்த தேர்வு ஜூன் மாதம் 21-ந் தேதி தான் தொடங்குகிறது. இன்னும் அதிக காலஅவகாசம் உள்ளதால், அதுகுறித்து இப்போதே முடிவு எடுக்க முடியாது. அடுத்து வரும் நாட்களில் நிலைமையை ஆராய்ந்த பிறகே உரிய முடிவு அறிவிக்கப்படும். அதுவரை தற்போது உள்ள நிலையே தொடரும்.

இவ்வாறு சுரேஷ்குமார் கூறினார்.
Tags:    

Similar News