செய்திகள்
உத்தவ் தாக்கரே

கொரோனா பாதிப்பை இயற்கை பேரிடராக கருதுங்கள்: மத்திய அரசுக்கு உத்தவ் தாக்கரே கடிதம்

Published On 2021-04-15 10:09 GMT   |   Update On 2021-04-15 10:09 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கு நிவாரணம் வழங்க உத்தவ் தாக்கரே முயற்சி செய்து வருகிறார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இன்றைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் முதல் அலையில் கூட இவ்வாறு அதிகரித்தது கிடையாது.

இதனால் சில மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, மகாராஷ்டிரா அரசு பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்க விரும்புகிறது. வெள்ளம், மின்னல் தாக்குதல், திடீரென அதிக மழை போன்ற இயற்கை பேரிடர் பாதிக்கும் காலத்தில் மக்களுக்கு உதவி செய்வது போன்று தற்போது கொரோனா தொற்றால் பாதித்து வரும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு கொரோனா வைரஸ் தொற்றை இயற்கை பேரிடர் என கருத வேண்டும் என்று மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

‘‘முதலமைச்சர் மாநில பேரிடர் நிவாரண நிதியை இயற்கை பேரிடருக்கு பயன்படுத்துவது போன்று, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்க பயன்படுத்த விரும்புகிறார். நீங்கள் சட்டபூர்வமாக அனுமதி வழங்க வேண்டும். ஆகவே, மத்திய அரசுக்கு மாநில அரசு சார்பில் கடிதம் எழுதியுள்ளது எனத் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.



மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று கொரோனா தொற்றால் 58,592 பேர் பாதிக்கப்பட்டனர். கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், இரவு 8 மணியில் இருந்து காலை 7 மணி கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அனைத்து மாநில தேசிய பேரிடம் சட்டம் மத்திய பேரழிவு பேராண்மை சட்டத்தின் ஒரு பகுதியாக வருகிறது. இதனால் மாநில பேரிடர் நிதியை பயன்படுத்த மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது என அதிகாரி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News