செய்திகள்
அகிலேஷ் யாதவ்

உ.பி. முன்னாள் முதல்வருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2021-04-14 05:24 GMT   |   Update On 2021-04-14 05:24 GMT
பொது நிகழ்வுகளில் பங்கேற்கும் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.
லக்னோ:

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. பொது நிகழ்வுகளில் பங்கேற்கும் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். 

இந்நிலையில், உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து டாக்டர்களின் அறிவுறுத்தலின்படி, வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இத்தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1.84 லட்சம் என்ற அளவில் உச்சத்தை எட்டியுள்ளது. அத்துடன், கொரோனாவால் ஏற்படும் மரணங்களும் அதிகரிக்கிறது. இதனால் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் தகுதி உள்ளவர்கள் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி அரசு அறிவுறுத்தி உள்ளது.
Tags:    

Similar News