செய்திகள்
கோப்புப்படம்

3-வது நாளாக தடுப்பூசி திருவிழா - 10.85 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன

Published On 2021-04-14 00:58 GMT   |   Update On 2021-04-14 00:58 GMT
நாட்டில் கொரோனா தடுப்பூசி திருவிழா நேற்று 3-வது நாளாக நடைபெற்ற நிலையில், மொத்தம் 10.85 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கின்றன.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா 2-வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், அதற்கு அணை போடும் விதமாக தடுப்பூசி திருவிழா எனும் முனைப்பாக தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று 3-வது நாளாக இது தொடர்ந்தது.

இந்நிலையில் மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாட்டில் இதுவரை மொத்தம் 10 கோடியே 85 லட்சத்து 33 ஆயிரத்து 85 ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கின்றன.

அதில், 90 லட்சத்து 33 ஆயிரத்து 621 சுகாதாரப் பணியாளர்களுக்கு போடப்பட்ட முதல் ‘டோஸ்’ தடுப்பூசிகளும், 55 லட்சத்து 58 ஆயிரத்து 103 சுகாதாரப் பணியாளர்களுக்கு போடப்பட்ட 2-வது ‘டோஸ்’ தடுப்பூசிகளும், 1 கோடியே 78 ஆயிரத்து 589 முன்களப் பணியாளர்களுக்கு செலுத்தப்பட்ட முதல் ‘டோஸ்’ தடுப்பூசிகளும், 49 லட்சத்து 19 ஆயிரத்து 212 முன்களப் பணியாளர்களுக்கு போடப்பட்ட 2-வது ‘டோஸ்’ தடுப்பூசிகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 4 கோடியே 17 லட்சத்து 12 ஆயிரத்து 654 பேருக்கு போடப்பட்ட முதல் ‘டோஸ்’ தடுப்பூசிகளும், 22 லட்சத்து 53 ஆயிரத்து 77 பேருக்கு போடப்பட்ட 2-வது ‘டோஸ்’ தடுப்பூசிகளும், 45 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்களில் 3 கோடியே 42 லட்சத்து 18 ஆயிரத்து 175 பேருக்கு போடப்பட்ட முதல் ‘டோஸ்’ தடுப்பூசிகளும், 7 லட்சத்து 59 ஆயிரத்து 654 பேருக்கு போடப்பட்ட 2-வது ‘டோஸ்’ தடுப்பூசிகளும் அடங்கும்.

நாட்டில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளில் 60.16 சதவீத தடுப்பூசிகள் 8 மாநிலங்களில் மட்டும் போடப்பட்டிருக்கின்றன. கடந்த 24 மணி நேரத்தில், 40 லட்சத்துக்கு மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தடுப்பூசி போடும் பணி தொடங்கிய 87-வது நாளான நேற்று முன்தினம் (ஏப்ரல் 12) நாட்டில் மொத்தம் 40 லட்சத்து 4 ஆயிரத்து 521 தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கின்றன. அதில், 34 லட்சத்து 55 ஆயிரத்து 640 பேருக்கு போடப்பட்ட முதல் ‘டோஸ்’ தடுப்பூசிகளும், 5 லட்சத்து 48 ஆயிரத்து 881 பேருக்கு போடப்பட்ட 2-வது ‘டோஸ்’ தடுப்பூசிகளும் அடங்கும்.

சர்வதேச அளவில் தினசரி போடப்படும் தடுப்பூசிகள் எண்ணிக்கையில், இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. நம் நாட்டில் தினமும் சராசரியாக 41 லட்சத்து 69 ஆயிரத்து 609 தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News