செய்திகள்
மாநில பா.ஜ.க. தலைவர் திலீப் கோஷ்

மேற்கு வங்காள பாஜக தலைவர் திலீப் கோஷுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

Published On 2021-04-13 19:06 GMT   |   Update On 2021-04-13 19:06 GMT
மேற்கு வங்காள மாநிலத்தில் இதுவரை நான்கு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
கொல்கத்தா:

மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் 4-வது கட்ட வாக்குப்பதிவின்போது, துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியானார்கள். இதுபற்றி அம்மாநில பா.ஜ.க. தலைவர் திலீப் கோஷ் பேசுகையில், ‘‘யாராவது எல்லை மீறி சென்றால் இதேபோன்ற சம்பவம் மேலும் பல இடங்களில் நடக்கும்’’ என்றார். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் சென்றன.

இந்நிலையில், திலீப் கோஷிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நேற்று நோட்டீஸ் அனுப்பியது. அதில், திலீப் கோஷ், தேர்தல் நடத்தை விதிகளை மீறி விட்டதாக தாங்கள் கருதுவதாக தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. திலீப் கோஷ் தனது பேச்சுக்கு புதன்கிழமை காலை 10 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News