செய்திகள்
உத்தவ் தாக்கரே

மராட்டியத்தில் நாளை முதல் 15 நாட்களுக்கு 144- தடை உத்தரவு- உத்தவ் தாக்கரே அறிவிப்பு

Published On 2021-04-13 16:14 GMT   |   Update On 2021-04-13 16:14 GMT
மராட்டியத்தில் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளதால் நாளை முதல் 15 நாட்களுக்கு 144- தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
மும்பை:

மராட்டியத்தில் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மராட்டியத்தில் 60 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்தையடுத்து, மராட்டியத்தில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. 

தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. எனினும் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வந்ததால், மேலும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக உத்தவ் தாக்கரே கடந்த சில தினங்களாக அனைத்து தரப்பினருடன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். இந்த ஆலோசனைக்கு பிறகு இன்று மாநில மக்களுக்கு உரையாற்றிய உத்தவ் தாக்கரே கூறியதாவது: -

மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிக அளவில் உள்ளது. இன்று மட்டும் 60,218- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா பரவல் அதிகரிப்பால் மருத்துவமனைகளின் படுக்கைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. வெண்டிலேட்டர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போது நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பால் கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. 

ஆக்ஸிஜன் விநியோகம் செய்ய விமானப்படை உதவியை அளிக்குமாறு பிரதமருக்கு நான் கோரிக்கை விடுக்கிறேன். ஏனெனில் சாலை வழியாக கொண்டு வரப்பட்டால் கூடுதல் நேரம் பிடிக்கும். கொரோனாவின் அடுத்த அலையை வீழ்த்த நாம் கண்டிப்பாக தடுப்பூசி இயக்கத்தை தீவிரப்படுத்த வேண்டும். 

நாளை இரவு 8 மணி முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும். மராட்டியத்தில் அடுத்த 15 நாட்களுக்கு 144  தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. அநாவசிய பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்படும். அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே பொது போக்குவரத்து இயங்கும்” என்றார். 
Tags:    

Similar News