செய்திகள்
தேர்தல் ஆணையம்

கேரளாவில் காலியாகும் 3 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்தல் தேதி அறிவிப்பு

Published On 2021-04-12 23:46 GMT   |   Update On 2021-04-12 23:46 GMT
கேரளாவில் 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் 30-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

கேரள மாநிலத்தில் இருந்து பாராளுமன்ற மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அப்துல் வகாப் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), கே.கே.ராகேஷ் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), வயலார் ரவி (காங்கிரஸ்) ஆகியோரின் பதவிக்காலம் வரும் 21-ம் தேதி முடிவடைகிறது. 

இந்நிலையில், அந்த இடங்களுக்கான தேர்தல் இம்மாதம் 30-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது.

இதற்கான அறிவிக்கை செவ்வாய்க்கிழமை (இன்று) வெளியிடப்படும் என்றும், ஏப்ரல் 30-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும் என்றும், அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கேரளாவில் தற்போது காலியாகும் 3 இடங்களுக்கு கடந்த 12-ம் தேதி தேர்தல் நடைபெறவிருந்தது. ஆனால் அந்த தேர்தலை தேர்தல் ஆணையம் திடீரென நிறுத்திவைத்திருந்தது.

இதற்கிடையே, குறிப்பிட்ட 3 இடங்களுக்கான தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு கேரள ஐகோர்ட்டு அறிவுறுத்தியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது.
Tags:    

Similar News