செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

அனைவருக்கும் தடுப்பூசி அளிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு

Published On 2021-04-12 21:33 GMT   |   Update On 2021-04-12 21:33 GMT
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலையின் தாக்கத்தால், ஒவ்வொரு நாளும் 1 லட்சத்தைத் தாண்டி பாதிப்பு பதிவாகிறது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலையின் தாக்கம் அதிவேகமாக உள்ளது. முதல் அலையை கட்டுப்படுத்த முடிந்த நிலையில், இந்த 2-வது அலை இந்தியாவுக்கு மாபெரும் சவாலாக அமைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் 1 லட்சத்தைத் தாண்டி பாதிப்பு பதிவாகி வருகிறது. 

கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கடந்த 1-ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், அரசியல் செயற்பாட்டாளரான தெஹ்சின் பூனாவாலா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.



அந்த மனுவில், இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அரசுக்கு உத்தரவிட வேண்டும். குறிப்பாக, சுவாசக் கோளாறு உள்ளவர்கள், நாள்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்ட இளம் வயதினர், கொரோனா தொற்றால் எளிதில் தாக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே அனைவருக்கும் தடுப்பூசி அளிப்பது இன்றைய காலகட்டத்தின் அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News