செய்திகள்
சந்திரபாபு நாயுடு

திருப்பதி இடைத்தேர்தல் - பிரசாரம் செய்த சந்திரபாபு நாயுடு மீது கல்வீச்சு

Published On 2021-04-12 20:41 GMT   |   Update On 2021-04-12 20:41 GMT
ஆந்திர முன்னாள் முதல் மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு இடைத்தேர்தலுக்காக பிரசாரம் செய்து வந்தார்.
திருப்பதி:

திருப்பதி பாராளுமன்ற தொகுதியில் வரும் 17-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதையொட்டி தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் பனபாக லட்சுமியை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்ய ஆந்திர முன்னாள் முதல் மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று மாலை 5 மணியளவில் திருப்பதி ரெயில் நிலையம் முன்பு வந்தார்.

அப்போது அவர் தலைமையில் கட்சியினர் ஊர்வலம் நடத்தினர். ஊர்வலத்தில் நடந்து சென்ற சந்திரபாபு நாயுடு மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதையறிந்த சந்திபாபுநாயுடு கீழே குனிந்து கல்வீச்சில் இருந்து தப்பித்தார். கல்வீச்சில் தொண்டர் ஒருவர் காயம் அடைந்தார்.

சந்திரபாபு நாயுடு தனது கட்சியினருடன் திடீரெனச் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் சமசர பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து சந்திரபாபு நாயுடு மற்றும் கட்சியினர் தர்ணா போராட்டத்தைக் கைவிட்டனர்.
Tags:    

Similar News